பாதாள மூலி' என்ற செடி அல்லது கொடி இருக்கிறதா?


இருக்கிறது.அது நமக்குத் தெரிந்த சப்பாத்திக் கள்ளியே.

பாதாள மூலி என்ற இந்த மூலிகை தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தானாக வளரக்கூடியது. பொதுவாக இதனை விஷச்செடி என பலர் நினைப்பதுண்டு .ஆனால் அதிக நன்மைகளையும் சத்துக்களையும் அளிக்கக்கூடியது .இதனை சப்பாத்திக்கள்ளி என்றும் நாகதாளி என்றும் கூறுவது உண்டு. கடுமையான வறட்சியாக, தண்ணீரே இல்லாத இடங்களில் இந்த காட்டுச் செடிகள் வேலை ஓரங்களில் வளர்ந்து கிடக்கும்.. இதில் மக்கள் காணப்படுவதால் ஆடு மாடுகள் நெருங்காது.

வட்ட வடிவ சதைப்பற்றான கொத்துக்கொத்தான முட்களை உடைய தண்டுகளையும் ,மஞ்சள் நிற மலர்களையும், புறப்பரப்பில் சிவப்பு நிற மலர்களையும், கனிகளையும் உடைய கள்ளி இனமாகும் . இந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டு, வேர் மற்றும் பழம் மருத்துவ குணம் உடையது.

மருத்துவ குணங்கள்

சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையாக திகழும் இந்த சப்பாத்தி கள்ளி, ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாக பெரிதும் துணை புரிகிறது.

இந்த சப்பாத்திக் கள்ளியில் கால்சியம், பொட்டாச்சியம், பாஸ்பரஸ் ,மெக்னீசியம் சத்துக்களும் உயர்தரமான நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

வறண்ட நிலங்களில் ஆடு, மாடு மேய்க்கும் போது நாவறட்சிக்கும், வெயில் ஏற்படுத்தும் உஷ்ண சோர்வை போக்கவும், உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளிப்பழம் துணை புரிகிறது.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்திக்கள்ளி சிறந்த உணவாக, மருந்தாக பயன்படுகிறது. காடுகளில், ஓடைகளில் தேங்கி நிற்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க, சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும். கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும். இந்த தண்ணீரை குடிக்கும்போது உடலானது பெரும் ஆற்றல் பெறுகிறது .

இருளர் இன மக்கள் கக்குவான் நோய்க்கு இந்த பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுத்து பூரணமாக குணமடைவார்கள்.

நஞ்சு நீக்குதல் ,உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அடைய செய்தல் ஆகிய குணங்களை உடையது.

இந்த பாதாளி மூலி சதையைச் சிறு சிறு துண்டுகளாக்கி, மிளகுத்தூள் சேர்த்து ஐந்து முதல் பத்து துண்டுகள் சாப்பிட எட்டி ,வாளம், அலரி, சேங்கோட்டை ,நாவி, ஊமத்தை ஆகியவற்றின் நஞ்சு உடலில் இருந்து நீங்கும்.

வெப்பத்தினால் ஏற்படும் வயிற்று வலி ,அடிக்கடி மலம் கழித்தல், கிராணி, சத்தத்துடன் வெளியேறும் உஷ்ண பேதி ஆகியவை குணமாகும்.

இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல் ,ரத்தம் கக்குதல் ஆகியவை தீரும்.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கிவிடும். இதனை சுரக்கட்டி என்பர். இதனை தீர்க்க இந்த கள்ளியின் பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்.

ஞாபக மறதி எனப்படும் அல்சைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுகிறது.

இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ள கண் பார்வை கூர்மையாகிறது.

சப்பாத்திக்கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி, உடல் பருமனை குறைக்கிறது.

இரண்டு வேரை வெட்டி எடுத்து பொடி செய்து 10 கிராம் வரை சாப்பிட கொடுக்க பூரான் கடி, வண்டு கடி நச்சு முறியும். தேள் கடிக்கு காயை வாட்டி, கடிவாயில் வைக்க குடைச்சல் தீரும்.

பழ சாற்றில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர கோடைகால வெப்ப நோய் தீரும் .

முள் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி முடக்குவாதத்திற்கு வைத்து கட்டலாம் .ஒத்தடம் கொடுக்கலாம்.

இரத்தக் கட்டிகள்

இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன் மற்றும் பிளேனாவாயிட்ஸ் போன்ற வேதிச் சத்துக்கள் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து ரத்தக் கட்டிகளை அழிக்கும் தன்மை உடையவ.

கட்டிகள்

முட்கள் உள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறம் உள்ள முட்களை நீக்கி, உள்புறமாக சிறிது மஞ்சள் தடவி அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையில் உள்ள கட்டிகள் விரைவில் உடைந்து, புண் எளிதில் ஆறும் . புண் ஆற தாமதமானால், மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.

கருமுட்டை

பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை தீர்வதற்கு இந்த சப்பாத்திக்கள்ளி பழம் உதவுகிறது. இந்த பிசிஓடியினால் கருமுட்டை பலம் இல்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதவிடாய் பிரச்சனைகள், கருக்கலைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இதற்கு சப்பாத்தி கள்ளிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருமுட்டை வளர்ச்சி சீராகும் .குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு பிரசாதம் ஆகும். ஆண்மை குறைபாடு, விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாதது என ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் இந்த பழம் தீர்க்கிறது.

வாரம் மூன்று முறை பழத்தை சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பையில் இருக்கும் நீர் கட்டிகள் தானாக அழிந்து விடுமாம். இந்தப் பழத்தை குழந்தை பேறுக்காக பெண்களும், விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிடும் போது எந்த விதமான இனிப்பு பொருட்களும் சாப்பிடக்கூடாது. டீ ,காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். நடை பயிற்சி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோயை போக்கும் மருந்தாகவும் அதை வராமல் தடுக்கவும் ஒரு சிறந்த மூலிகையாக விளங்குகிறது சப்பாத்திக்கள்ளி.

தகவல்கள்: இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...