வயிற்றை சுத்தம் செய்ய என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?
காலை எழுந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன், அதில் மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து விடுங்கள். உடன் மூன்று ஸ்பூன் கல்உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் ஒரு அரை லிட்டர் அருந்துங்கள். கொஞ்ச நேரத்தில் கழிவறை செல்லத் தூண்டும். இல்லையெனில், பத்து நிமிடம் கழித்து, இன்னும் கொஞ்சம் அருந்தவும். ஐந்து நிமிடங்களில் கழிவறை செல்வது நிச்சயம். சென்று வந்துடன், மீண்டும் எலுமிச்சை+உப்பு நீர் கலவையை எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு அருந்துங்கள். சில நிமிடங்களில், மறுபடியும் மலம் கழியும். இதேபோல் நான்கு/ஐந்து முறை இந்த கலவையை முடிந்த அளவு அருந்தினால், அத்தனை முறையும் கழிவறை செல்வது நிச்சயம். நீர் அருந்துவதை நிறுத்தினால், மலம் கழிவது நின்றுவிடும். இந்த முறையில் வயிறு இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்படும். குடல் வலுப்பெறும். சாப்பிடும் உணவு உடம்பில் தங்கும். நன்கு செரிமானம் ஆகும்.
மிகமிக நல்ல முறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக