40 வயதுக்கு மேல் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும்?
திருமணம் ஆனவரானால் மனைவியின் + மற்றும் - அவரின் உறவினர்களை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்.
பிள்ளைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் போது எந்த உயர் கல்வியில் சேர்த்து விடுவது என்ற எண்ணம் அடிமனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
வயதான பெற்றோரின் உடல் மற்றும் உள நலம் குறித்த கவலைகள் ஒருபுறம் உறுத்திக் கொண்டிருக்கும்.
அலுவலகம் அல்லது தொழில் சார்ந்த பிரச்னைகள்.. எதிர்கால சேமிப்பு போன்றவை " எங்களையும் கொஞ்சம் கவனி " என்று சொல்லிக் கொண்டே இருக்கும் ஒலிகளும் காதில் விழ அவை குறித்த சிந்தனை ஒருபக்கம்.
மொத்தத்தில் " அலை அடிக்கத்தான்.. தலை முழுகத்தான் " என்ற மனநிலையில் இருப்பார்.
அதனால் குடும்பத்தார் " நாற்பது வயதில் நாய்க் குணம் " என்பதை மனதில் வைத்துக் கொண்டே தான் அவரிடம் பேசப்..பழக வேண்டும்.
திருமணம் ஆகாமல்.. எந்தப் பொறுப்பும் இல்லாதவரானால்.. ஜாலியாக அரட்டை.. மால்கள்.. கிரிக்கெட் மேட்ச்.. திருமணமாகித் திண்டாடுபவர்களைக் கிண்டல் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு கால் போன போக்கில்.. மனம் போன போக்கில் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இப்படி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் எங்கள் நண்பர்கள் மூன்று பேர் வீட்டில்..
அதிகமான குடும்பப் பொறுப்புகள் உடையவர்கள் என்றால் அவர்கள் வெறும் இயந்திரங்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.. கொண்டிருக்கிறார்கள்.
இது போலும் எங்களுக்குத் தெரிந்த ஒரு பிள்ளை இருக்கிறான்.
ஒருவித மன அழுத்தத்திலேயே இருக்கிறான். அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வருவான். கொஞ்ச நேரம் மடமடவென பேசுபவன் அடுத்த ஐந்து நிமிடங்களில் கிளம்பி விடுவான்.
கட்டாயப்படுத்தி.. சாப்பிட வைத்து அனுப்புவோம்.
எப்படி இருப்பவர்கள் என்றாலும் சுற்றம் பேண வேண்டும் : நல்ல நட்பு வட்டம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த எளியவளின் கருத்து !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக