தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து மிதமான சூட்டில் வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா? இது பலன் தருமா?

 தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து மிதமான சூட்டில் வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா? இது பலன் தருமா?

தலைமுடி கொட்டுவதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் உள்ளன:


1. மரபணு சார்ந்த பரம்பரை வழுக்கைத் தலை.


2. தலைமுடி அமைந்த தோலின்(Scalp) மீது ஏற்படும் அசுத்தம் மற்றும் அதன் காரணமாய் ஏற்படும் பூஞ்சை (Fungus) மற்றும் ஒட்டுண்ணித் தொற்று.


முதல் காரணியைத் தடுக்க இயலாது.


இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும். தலைமுடியின் ஆதாரமான மண்டையோட்டுத் தோலை (Scalp) சுத்தமாக சுகாதாரமாக வைத்திருப்பதின் மூலம் இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும்.



முடிக்கு பளபளப்பையும் எண்ணெய் பிசுக்குத் தன்மையையும் இயற்கையாகவே வழங்கக்கூடியது தோலுக்கு அடியிலுள்ள செபேஷியஸ் சுரப்பி (Sebaceous Gland). அடுத்து வியர்வைச் சுரப்பி மூலம் உப்பு நீர். அத்துடன் நாமும்வேறு எண்ணெய்யைத் தடவுகிறோம். எண்ணெய்யும் உப்பும் தோலில் படியும் அழுக்கும் பூஞ்சைகளுக்கு அருமையான உணவு. தலையில் எண்ணெய் தடவுவது என்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்; பூஞ்சைகளும் ஒட்டுண்ணிகளும் செழித்து வளர நாமே வழிவகுத்துவிடுகிறோம். தலைமுடியின் ஆதாரமான மண்டையோட்டுத் தோலை (Scalp) சுத்தமாக சுகாதாரமாக வைத்திருப்பதின் மூலமே இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...