வாழைக்காயின் மருத்துவ குணம் என்ன?

வாழைக்காயின் மருத்துவ குணம் என்ன?

பொதுவாக வாழைக்காய் என்றாலே அது வாயுப்பிரச்சினை உண்டு பண்ணும் என்று சிலர் அதை சாப்பிட மறுப்பார்கள். பழமாக எடுப்பதையே விரும்புவர்.ஆனால், வாழைக்காயும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதில் பெரிதும் பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள்

வாழைக்காய் மற்றும் வாழைமரம் தொடர்பான அனைத்துமே நம் உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுக்கோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

நீரிழிவு

வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால், உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது.

புற்றுநோய்

வயிற்றில் வருகிற பெருங்குடல் புற்று ஒருவருக்கு வேதனை தரக்கூடிய ஒரு நோய். பொதுவாக புற்றுநோய் என்றாலே வேதனை தரக்கூடியது. வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தங்கும் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க அதிகம் வாழைக்காய் எடுத்துக் கொள்வது நல்லது.

எலும்புகள்

எலும்புகள் உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பதற்கு உணவில் வாழைக்காய் சேர்க்கவும்.வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மக்னிசியம் ஆகியவை உள்ளது. இவைகள் எ எலும்பிற்கு போதிய பலம் தந்து, எதிர்காலத்தில் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.

அதிக உணர்ச்சி வசப்படல்

ஒரு சிலர் சிறு விஷயங்களுக்கு கூட அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாழைக்காய் ஒரு சிறந்த உணவு .வாழைக்காயில் டிரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயன மாற்றங்களை ஒழுங்குப்படுத்தி உணர்ச்சிகரமான மனநிலை உண்டாவதை தடுத்து மன அமைதியை தருகிறது.

உடல் எடை குறைய

இன்று பலருக்கும் இருக்கும் தலையாய பிரச்சனை அதிக உடல் எடை. இந்த உடல் எடையை குறைக்க சரியான உணவுகள் சாப்பிட வேண்டுவது அவசியமாகிறது. வாழைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால், உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடை குறைய உதவிபுரிகிறது.

மலச்சிக்கல்

உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் மலம் கழிப்பது ஒரு ஆரோக்கிய அறிகுறி. மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது .வாழைக்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து உள்ளது .இது குடல்களை சுத்தப்படுத்தி, அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றி ,மலச்சிக்கலை போக்குகிறது .

அதிக பசி

வயிறு பருமனாக இருப்பதற்கு அதிகமாக சாப்பிடுவது ஒரு காரணம். இவ்வாறு வயிறு பருமன் இருப்பவர்கள் வாரம் இரு முறை சற்று பழுத்த நிலையில் இருக்கும் வாழைக்காயை சமைத்து சாப்பிடுவதால், உடல் அதிக பருமன் ஆவதைத் தடுக்க முடியும். பசி உணர்வை கட்டுப்படுத்தி குறைவாக உணவை உட்கொள்ளும் நிலையை ஏற்படுத்தும்.

இதயம்

வாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத் தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் ,பொட்டாசியம் சத்து அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து, இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்க வாழைக்காய், பழம் அதிகம் சாப்பிடலாம்.

கண்கள்

வாழைக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது .கண்களில் கண் புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்த வாழைக்காய் உதவுகிறது.

சுறுசுறுப்பு

வாழைக்காயில் உள்ள அதிக சத்துக்கள், குறிப்பாக பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. அடிக்கடி சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பும், உற்சாகமும் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வதில் வாழைக்காய் உதவுகிறது.

வாழைக்காயில் அதிக ஆண்டி ஆக்சிடென்ட் இருக்கிறது.இதிலுள்ள ஸ்டார்ச் கரையாத நார்ச்சத்தாக செயல்பட்டு நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்று அடைகிறது. அங்குள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் தொடர்பாக வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காய் மற்றும் பழுக்காத வாழைப்பழம் எந்த மாதிரியான பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது.

நன்றி 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...