7அப் குடித்து விட்டு மென்டோஸ் மிட்டாய் சாப்பிட்டால் ஆபத்தா?

 

7அப் குடித்து விட்டு மென்டோஸ் மிட்டாய் சாப்பிட்டால் ஆபத்தா?
7அப் குடித்து விட்டு மென்டோஸ் மிட்டாய் சாப்பிட்டால் ஆபத்தா?

7 அப் பாட்டிலில் மென்டோஸை போட்டால், பாட்டிலில் இருந்து ஒரு நீரூற்று போல பொங்கி வெளியே ஊற்றும் என்பது உண்மை தான். சோடாவில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகள் மெண்டோஸின் மேற்பரப்பில் இணைகின்றன. இதனால் மென்டோக்கள் நிறைய குமிழ்களை உருவாக்குவதால் அவை மேற்புறமாக உயர்ந்து திரவத்துடன் சேர்த்து வெளியே தள்ளப்படுகின்றன.

இருப்பினும், 7 அப் குடித்த பிறகு Mentos உட்கொள்வதால் அதே விளைவு ஏற்படாது. நீங்கள் மென்டோஸ் மற்றும் கோக், 7 அப் போன்ற பானங்களைக் கலக்கும்போது ஏற்படும் இந்த மாற்றத்துக்கு காரணம் மென்டோஸ் மிட்டாய்களின் சொரசொரப்பான மேற்புறம் தான். அதனால் தான் கார்பனேற்றப்பட்ட பானத்தில் இவற்றை வைக்கும் போது அதன் மேற்பரப்பில் நிறைய குமிழ்கள் வேகமாக உருவாகின்றன. ஆனால் மென்டோஸ் மேற்புறம் உள்ள இந்த கரடுமுரடான பூச்சு நீங்கள் சாப்பிடும் தருணத்தில் கரைந்துவிடுவதால் வயிற்றில் அதே எதிர்வினை நிகழாது. கவலைப்படத் தேவையில்லை!

ஆனால் 7 அப் போன்ற பானங்களைக் குடிப்பது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...