முடி உதிர்தலை குறைப்பது எப்படி?

 முடி உதிர்தலை குறைப்பது எப்படி?

முடி உதிர்விற்கான காரணம் என்ன என்று அறிந்து கொண்டால் முடி உதிர்தலை குறைக்க ஏதுவாக இருக்கும்


ஆகவே முடி உதிர்தலின் காரணத்தையும்,முடி உதிர்தலை கட்டுபட்டுத்துவதற்கான தீர்வுகளையும் பகிர்ந்துள்ளேன்..


முடி உதிர்விற்கான காரணங்கள்…,..


மன அழுத்தம்


அதிக மன அழுத்தம் திடீரென முடி உதிர்தலை ஏற்படுத்தும், இது பல மாதங்களுக்கு நீடிக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்


இரும்புச்சத்து, தாமிரம், துத்தநாகம் மற்றும் புரதங்கள் போன்றவை நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்காமல் போகலாம்

வைட்டமின் டி குறைபாடு முடி உதிர்தலுக்கு மற்றொரு காரணம்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு


இரு பாலினருக்கும் வயதிற்கேற்ப ஹார்மோன் மாற்றங்களாலும் முடி உதிர்வு ஏற்படும்

தைராய்டு பிரச்சினைகள்


தைராய்டு ஹார்மோனின் அதிகப்படியான அல்லது போதுமான அளவு உற்பத்தி செய்யாமல் இருந்தாலோ , முடி வளர்ச்சியின் சுழற்சி மாறக்கூடும்.

தைராய்டு பிரச்சினை இருந்தால், எடை இழப்பு இதய துடிப்பு மாற்றங்கள் போன்ற முடி உதிர்தலுடன் பிற அறிகுறிகளையும் காணலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்)


பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) கொண்ட பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படும்

இது இயல்பை விட அதிக அளவு ஆண்ட்ரோஜன்களை உருவாக்குகிறது. இது பெரும்பாலும் முகம் மற்றும் உடலில் முடி வளர காரணமாகிறது,

அதே நேரத்தில் தலையில் முடி மெல்லியதாக வளரும். முகப்பரு மற்றும் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும்.

மருந்து,மாத்திரைகள்


பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எடுப்போருக்கு,உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் இதை தவிர சில மாத்திரைகளினால் முடி உதிர்வு ஏற்படும்.

சிகை அலங்காரம் பொருட்கள்


சாயங்கள் மற்றும் ஸ்டைலிங் தயாரிப்புகளில் காணப்படும் நச்சு இரசாயனங்கள் காரணமாக அதிகமாக பயன்படுத்துவது முடி உதிர்வதற்கு வழிவகுக்கும்.

வயது


வயதாகும்போது, ​தலைமுடி வளரும் வீதம் குறைகிறது.

முடி இழைகள் சிறியதாகி, நிறமி குறைவாக இருக்கும், மேலும் முடி மெல்லியதாகவும், மென்மையாகவும், நரைப்பாகவும் மாறும்

முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்


ஷாம்பு


ஆர்கானிக் ஷாம்பு அல்லது சீயக்காய் தேர்வு செய்வது நல்லது

ஷாம்புவை அடிக்கடி மாற்ற கூடாது

ஷாம்பவை நேரடியாக பயன்படுத்தாமல் தண்ணீரில் கலந்து மயன்படுத்தவும் ..

கண்டிஷனர் ,சீரம்


ஒரு நல்ல கண்டிஷனரில் சேதமடைந்த முடியை சரிசெய்ய உதவும் அமினோ அமிலங்கள் உள்ளன, மேலும் அவற்றை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

முடி சிக்கல் ஏற்படுவதை தவிர்கிறது .. இதனால் முடி உதிர்வு குறையும்..

உணவு மற்றும் உடற்பயிற்சி


தலைமுடிக்கு சரியான ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக ஏராளமான புரதம் மற்றும் இரும்புச்சத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும்.

அநிகமான இனிப்புவகைகளை சேர்த்து கொள்வதை தவிர்க்கலாம் .. இதுவும் முடி உதிர்வுக்கு ஒர் காரணம் ..

முடி உதிர்தலைக் குறைக்க யோகா மற்றும் தியானம் பயனுள்ளதாக இருக்கும். இதனால் மன அழுத்தமும் குறையும்..

வைட்டமீன் டி குறைபாடை தவிர்க்க காலை மிதமான சூரிய ஒளி வெளிச்சம் படும் இடத்தில் நடைபயிற்சி செய்யலாம்..

இரசாயன சிகிச்சைகள்


நேராக்க, பெர்மிங் மற்றும் வண்ணமயமாக்கல்்உலர்த்திகள் (dryer),கர்லிங் தண்டுகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

உலர்த்தியை …சில சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டுமாயின் , அதை மிகக் குறைந்த வெப்ப அமைப்பில் வைத்து பயன்படுத்தவும்.

தலைமுடியை சூடாக்கும் பிற தயாரிப்புகளைப் பயன்படுத்தினால், ஒரு வலுவான - கண்டிஷனருடன் தொடங்கி ஒரு பாதுகாப்பு தெளிப்பை பயன்படுத்துவது சிறந்தது

எண்ணெய்


எண்ணெய் வைப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் வேர்களை வளர்க்கிறது.

உச்சந்தலையில் பொருந்தக்கூடிய எண்ணெயுடன் வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்யுங்கள்.

ஒரு ஷவர் தொப்பியுடன் அதை மூடி, இரண்டு மணி நேரம் கழித்து லேசான ஷாம்பூ அல்லது சீயக்காய் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

தற்போது முடி உதிர்தலின் காரணத்திற்காக …நான் கேரட் எண்ணெய் பயன்படுத்துகிறேன் .. பரிசோதனை ஒட்டமே… பலன் தந்தால் பின்னதாக கோராவில் பதிவிடுகிறேன்…...


சில ஹேர் பேக்குகளும் முடி உதிர்தலை குறைக்க உதவும்…


மேலும் கீழுள்ளவை தலையின் மயிர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும்.. இதுவும் முடி உதிர்வுக்கு காரணம் ..


அதிகமான ஹேர் கிளிப்ஸ் பயன்படுத்தினால் இரவு நேரத்தில் இதனை நீக்கிவிட்டு தூங்கவும் .இதனால் ஏற்படும் அழுத்தம் குறையும்

குளித்த முடித்தவுடன் .. ஈரமான துண்டை தலையில் அதிகமான நேரம் வைப்பதை தவிர்க்க வேண்டும்்..

ஈரத்தலையில் சீப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் .

ஆரோக்கியமான உணவுமுறைகளும் ,தேவையான முடி பராமரிப்பும் இருந்தால் முடி உதிர்தலை குறைக்கலாம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...