मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता, वायुदाब, पवन, तापमान, मेघ) का द्योतक है। इस प्रकार मौसम की यह विशेषता है कि यह कभी भी स्थिर न रह कर निरंतर परिवर्तनशील एवं गतिशील रहता है।[1] तूफान का मौसम प्रायः हम मौसम, ऋतु व जलवायु को एक ही समझ लेते हैं किंतु तीनों में पर्याप्त अंतर है। मौसम जहां पर्यावरणीय गतिविधियों का द्योतक है वहीं ऋतुएं अपेक्षाकृत अधिक समय (3 - 4 माह) में होने वाली पर्यावरणीय गतिविधियों का बोध कराती हैं। जबकि जलवायु लम्बी समयावधि में औसत वायुमंडलीय स्थितियों को संबोधित करता है। विश्व मौसम विज्ञान संगठन (WMD) ने जलवायु के लिए मौसम के विभिन्न तत्वों का औसत निकालने हेतु 31 वर्षों की अवधि को प्रमाणिक माना है। मौसम को प्रभावित करने वाली अधिकांश घटनाएं क्षोभ मंडल (ट्रोपोस्फीयर) में होती हैं।[2] पारितंत्र के अनुसार छह ऋतुएँ मौसम का पूर्वानुमान मौसम के तत्व मौसम मापने के उपकरण मौसम के प्रकार मौसम को प्रभावित करने वाले कारक मौसम और जलवायु में अंतर मौसम बदलने के कारण इन्हें भी देखें बाहरी कड़ियाँ संदर्भ अंतिम बार 1 महीने पहले संजीव कुमार द्वारा संपादित किया गया Related pages पृथ्वी का वायुमण्डल पृथ्वी को चारों ओर से घेरे विभिन्न गैसों द्वारा निर्मित वायु का आवरण भारत की जलवायु स्थलीय संरचना पर जलवायु का प्रभाव मौसम विज्ञान कृपया यह स्पष्ट करें कि आप "मौसम" शब्द के बारे में कौन सी जानकारी चाहते हैं। क्या आप इसे खोजे जाने की प्रवृत्ति, उपयोग, या किसी विशेष संदर्भ में समझना चाहते हैं? आपकी आवश्यकताओं के अनुसार मैं जानकारी प्रदान करूंगा।

அஸ்வெசும பெறுகின்ற பெற்றோர்களுக்கு விசேட செய்தி

 அஸ்வெசும பெறுகின்ற பெற்றோர்கள், விசேட தேவையடையவர்கள், சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



இந்த திட்டத்தை அடுத்த தவணையிலிருந்து அமுல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து மிதமான சூட்டில் வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா? இது பலன் தருமா?

 தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து மிதமான சூட்டில் வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா? இது பலன் தருமா?

தலைமுடி கொட்டுவதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் உள்ளன:


1. மரபணு சார்ந்த பரம்பரை வழுக்கைத் தலை.


2. தலைமுடி அமைந்த தோலின்(Scalp) மீது ஏற்படும் அசுத்தம் மற்றும் அதன் காரணமாய் ஏற்படும் பூஞ்சை (Fungus) மற்றும் ஒட்டுண்ணித் தொற்று.


முதல் காரணியைத் தடுக்க இயலாது.


இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும். தலைமுடியின் ஆதாரமான மண்டையோட்டுத் தோலை (Scalp) சுத்தமாக சுகாதாரமாக வைத்திருப்பதின் மூலம் இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும்.



முடிக்கு பளபளப்பையும் எண்ணெய் பிசுக்குத் தன்மையையும் இயற்கையாகவே வழங்கக்கூடியது தோலுக்கு அடியிலுள்ள செபேஷியஸ் சுரப்பி (Sebaceous Gland). அடுத்து வியர்வைச் சுரப்பி மூலம் உப்பு நீர். அத்துடன் நாமும்வேறு எண்ணெய்யைத் தடவுகிறோம். எண்ணெய்யும் உப்பும் தோலில் படியும் அழுக்கும் பூஞ்சைகளுக்கு அருமையான உணவு. தலையில் எண்ணெய் தடவுவது என்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்; பூஞ்சைகளும் ஒட்டுண்ணிகளும் செழித்து வளர நாமே வழிவகுத்துவிடுகிறோம். தலைமுடியின் ஆதாரமான மண்டையோட்டுத் தோலை (Scalp) சுத்தமாக சுகாதாரமாக வைத்திருப்பதின் மூலமே இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும்.



40 வயதுக்கு மேல் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும்?

 40 வயதுக்கு மேல் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும்?

திருமணம் ஆனவரானால் மனைவியின் + மற்றும் - அவரின் உறவினர்களை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்.


பிள்ளைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் போது எந்த உயர் கல்வியில் சேர்த்து விடுவது என்ற எண்ணம் அடிமனதில் ஓடிக் கொண்டிருக்கும்.


வயதான பெற்றோரின் உடல் மற்றும் உள நலம் குறித்த கவலைகள் ஒருபுறம் உறுத்திக் கொண்டிருக்கும்.


அலுவலகம் அல்லது தொழில் சார்ந்த பிரச்னைகள்.. எதிர்கால சேமிப்பு போன்றவை " எங்களையும் கொஞ்சம் கவனி " என்று சொல்லிக் கொண்டே இருக்கும் ஒலிகளும் காதில் விழ அவை குறித்த சிந்தனை ஒருபக்கம்.


மொத்தத்தில் " அலை அடிக்கத்தான்.. தலை முழுகத்தான் " என்ற மனநிலையில் இருப்பார்.


அதனால் குடும்பத்தார் " நாற்பது வயதில் நாய்க் குணம் " என்பதை மனதில் வைத்துக் கொண்டே தான் அவரிடம் பேசப்..பழக வேண்டும்.


திருமணம் ஆகாமல்‌.. எந்தப் பொறுப்பும் இல்லாதவரானால்.. ஜாலியாக அரட்டை.. மால்கள்.. கிரிக்கெட் மேட்ச்.. திருமணமாகித் திண்டாடுபவர்களைக் கிண்டல் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு கால் போன போக்கில்.. மனம் போன போக்கில் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். இப்படி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் எங்கள் நண்பர்கள் மூன்று பேர் வீட்டில்..


அதிகமான குடும்பப் பொறுப்புகள் உடையவர்கள் என்றால் அவர்கள் வெறும் இயந்திரங்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.. கொண்டிருக்கிறார்கள்.


இது போலும் எங்களுக்குத் தெரிந்த ஒரு பிள்ளை இருக்கிறான்.


ஒருவித மன அழுத்தத்திலேயே இருக்கிறான். அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வருவான். கொஞ்ச நேரம் மடமடவென பேசுபவன் அடுத்த ஐந்து நிமிடங்களில் கிளம்பி விடுவான்.


கட்டாயப்படுத்தி.. சாப்பிட வைத்து அனுப்புவோம்.


எப்படி இருப்பவர்கள் என்றாலும் சுற்றம் பேண வேண்டும் : ‌நல்ல நட்பு வட்டம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த எளியவளின் கருத்து !



வெங்காயம் சாப்பிடுவது உடலுக்கு என்னென்ன நன்மை தரும்?

 வெங்காயம் சாப்பிடுவது உடலுக்கு என்னென்ன நன்மை தரும்?

...... சின்ன வெங்காயம் சாப்பிட்டால் அதாவது கொஞ்சமா வணக்கி மிக்சியில் அரைகுறையாக அறைத்து வெதுவெதுப்பான 200 மி. தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு தினமும் குடித்தால் எதிர்காலத்தில் கண்புரை வருவதை தவிர்க்கலாம் .... அல்சர் குணமாகும். கூடவே இரண்டு வெள்ளை பூண்டு பல் சேர்த்துக் கொண்டால் வாய்யுக் கோளாறு வராது. .....கண் பார்வ நன்றாக இருக்கும்......முடிக்கும் நல்லது..... உப்புசமா இருக்கிற வயிறு கொஞ்சம் தளர்ச்சியா இருக்கும்....வெங்காயம் ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்டது . ஆண் களுக்கு ரொம்ப நல்லது.....வெங்காய சூஸ் தினமும் சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டு. தொடர்ந்து சாப்பிடுங்கள் தெரியும்.

பகலில் அதிகம் தூங்காமல் இருப்பதற்கு வழி என்ன?

 பகலில் அதிகம் தூங்காமல் இருப்பதற்கு வழி என்ன?

பகலில் அதிகம் தூங்காமல் இருப்பதற்கு வழி ?


இரவில் முன் தூங்கி காலையில் சூரியன் உதிக்கும் போது எழவும்.


சுறுசுறுப்பாக செயல்படவும்.


குளித்து காலை சிற்றுண்டி உண்ணவும்.


பணியில் ஈடுபடவும்.


இடையில் காலை மாலை தேநீர் காபி அருந்தவும்.


11.30 மணிக்கு பழம் சாப்பிடவும்.


மிதமான மதிய உணவு எடுக்கவும்.


மதியம் உண்ட பிறகு சற்று ஓய்வெடிக்கவும்.



அரிசி கழுவிய நீரின் நன்மைகள் என்னென்ன?

 அரிசி கழுவிய நீரின் நன்மைகள் என்னென்ன?

பொதுவாக அரிசி கழுவி நீரை கீழே கொட்டி விடுவோம் .அதற்கு பதிலாக அதை நாம் பயன்படுத்தும் போது நம் சருமம், கூந்தல் ஆகியவை எவ்வளவு ஆரோக்கியம் பெறுகின்றன என்பதை யாரும் அறிவதில்லை.


இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.


அரிசியை சுத்தமான நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து ,அந்நீரால் முகம் மற்றும் கூந்தலை பராமரிக்கலாம்.



இந்த நீரை சூடு பண்ணி, அதைக் கொண்டு குழந்தைகளின் கால்களை மீது ஊற்றி வந்தால் கால்களுக்கு பலம் கிடைக்கும் .உடல் முழுவதும் குளிக்க வைக்கலாம்.இதனால் உடலுக்குத் தேவையான பலமும் கிடைக்கும். .இவை இன்றும் கிராமப்புறங்களில் பின்பற்றி வரப்படுகிறது. மூன்று வயது வரை கால்களில் பலமின்றி நடக்காது இருந்த என் தம்பிக்கு அரிசி கழுவிய நீரை சூடு பண்ணி கால்களில் ஊற்றிவிட்டதாக என் தாயார் அடிக்கடி கூறுவார்.


அரிசி கழுவிய நேரில் உள்ள சத்துக்கள் சரும துளைகளின் வழியே சருமச் செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடவும் இருக்க உதவுகிறது. மேலும் அழகை அதிகரிக்க மட்டும் இல்லாது, இதனை குடிக்கும் பொழுது அதில் இருக்கும் கார்போஹைட்ரேட்களும் மற்ற ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு ஆற்றலை தருகின்றன.


ஊற வைத்த அரிசியை கைகளால் நன்கு அழுத்தி கழுவும் போது, நம் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அரிசி நீருடன் சேர்ந்து வினைபுரிந்து கூடுதல் பலன்களை கொடுக்கும்.


தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி குளித்த பின்பு ,அரிசி நீரில் கூந்தலை அலச வேண்டும் .இவ்வாறு பதினைந்து நிமிடங்கள் வேர் முதல் நுனிவரை மென்மையாக தலையில் மசாஜ் செய்து ,சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனால் முடிக்கு வலிமையும் ,இயற்கையான பொலிவும், கிடைக்கும். முடி உதிர்வு கட்டுப்படும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்யலாம் . இன்றும் எங்கள் வீட்டில் அரிசி கழுவிய மற்றும் வடித்த நீரைப் பயன்படுத்தி, தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது.



சருமத்திற்கு பயன்படுத்தும் போது செல்கள் புத்துணர்ச்சி பெற்று பொலிவு அதிகரிக்கிறது. இதில் உள்ள மாவுச்சத்து, வெடிப்பு ,முகப்பரு, தோல் அலர்ஜி போன்றவற்றை நீக்க உதவுகிறது .தூய்மையான பருத்தி துணியை அரிசி நீரில் நனைத்து அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக துடைத்தால் சருமத் துளைகள் இறுகி மேனி செம்மையாகும். அரிசி நீரில் உள்ள துவர்ப்பு தன்மை, எண்ணெய் பசையை குறைத்து, முகப்பருவை தடுக்கிறது.


தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சிறிது அரிசி நீரை கலந்து தடவும் போது, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி இளமை பொலிவு அதிகரிக்கும்.



मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...